தங்கம் விலை உயர்வு !

கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து வரும் நிலையில் இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 640 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியளித்தது.

சென்னையில் இன்றைய காலை நேர விலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 80 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூபாய் 7,255க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் படி ஒரு சவரன் தங்கம் ரூபாய் 640 உயர்ந்து 57,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்றைய காலை நேர விலைநிலவரப்படி வெள்ளியின் விலையில் எந்தவிதமான மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 101க்கும், ஒரு கிலோ பார்வெள்ளி விலை ரூபாய் 1,01,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *