Bharatiya Janata Party: 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு சீட் இல்லை!

Advertisements

டெல்லி: மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதல் பட்டியல் இந்த மாத இறுதிக்குள் வெளியாக வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தலில் 3வது முறையாக ஆட்சி அமைக்கப் பாஜக தீவிரமாக உள்ளது. அதேவேளையில் பாஜக.விடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து I.N.D.I.A கூட்டணியை உருவாக்கி உள்ளனர். இந்தக் கூட்டணியின் தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் முதல் கட்டமாக ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு நடந்து முடிந்துள்ளது.

மற்ற எதிர்க்கட்சிகளும் விரைவில் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதல் பட்டியல் இந்த மாத இறுதிக்குள் வெளியாக வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 70 வயதுக்கு மேற்பட்ட எம்.பி.க்கள் சிலருக்கு தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது எனக் கூறப்படுகிறது. முதற்கட்ட பட்டியலில் 150 முதல் 160 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவிக்கப் பாஜக திட்டமிட்டுள்ளது.

பாஜக வேட்பாளர்களைத் தேர்வு செய்யப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய தேர்தல் குழு இந்த மாத இறுதியில் கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்நாத் சிங், வி.கே.சிங், அர்ஜுன் ராம் மேக்வால், கிரிராஜ் சிங் உள்ளிட்டோர் 70 அல்லது 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.

இதேபோல், ராஜேந்திர அகர்வால், ரவிசங்கர் போன்ற ஒன்றிய அமைச்சர்கள் உட்பட 56 மக்களவை எம்பிக்கள் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு சீட் இல்லை என்ற முடிவு பாஜகவின் முக்கிய தலைவர்களுக்குப் பொருந்தாது எனவும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *