“தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டம் இன்று தொடக்கம் – முதல்வர் விஜய்!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார். முன்னதாக அவர் இன்று காலை 9.30 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு தனி விமானம் மூலம் பகல் 11 மணிக்கு மதுரை வருகிறார். அப்போது, அவருக்கு மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது. இதனைத்தொடர்ந்து திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி விமான நிலயத்திலிருந்து புறப்பட்டு, பெருங்குடி, மண்டேலா நகர், சிந்தாமணி, ரிங்ரோடு சுற்றுச்சாலை, கருப்பாயூரணி வழியாக சென்று பொதுமக்களை சந்திக்க உள்ளார்.
மதியம் 12 மணியளவில் மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்று, பிறந்த 25 குழந்தைகளுக்குத் தன்கைகளால், தங்க மோதிரங்களை வழங்கித் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டுக்குச் சென்று, பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்து, அங்குச் சிகிச்சை பெறும் கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களை சந்தித்து நலம் விசாரிக்க உள்ளார். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *