
சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து விற்பனைக்காகச் சென்னை கோயம்பேடு சந்தைக்குக் கொண்டுவரப்படுகிறது. அந்த வகையில் பண்டிகை காலம் என்பதால் காய்கறிகளின் விலையானது சற்று அதிகரித்துள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 24 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நெல்லிக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 64 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 8 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
காலிஃப்ளவர் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 110 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இஞ்சி ஒரு கிலோ 120 ரூபாய்க்கு மாங்காய் ஒரு கிலோ 150 ரூபாய்க்கும் வெண்டைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கு முள்ளங்கி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.


