Coimbatore: ரூ.300 கோடி மோசடி செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது!

Advertisements

தொழில் அதிபருக்குச் சொந்தமான கோடிக்கணக்கான சொத்துக்கள் மற்றும் பணத்தை மோசடி செய்த மூன்று பேரைக் கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் பீளமேடு பகுதியில் மின் காற்றாலை அலுவலகத்தை நடத்தி வருகிறார். தொழில் அதிபரான இவரது அலுவலகத்தில் பணிபுரிந்த 8 பேர் சிவராஜிற்கு சொந்தமான சுமார் 200 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு போலி ஆவணம் தயார் செய்தும், 100 கோடி ரூபாய் பணத்தையும் மோசடி செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

மோசடி செய்ததை அறிந்த சிவராஜ் கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலிசார், மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக வசந்த் மற்றும் சிவகுமார் ஆகிய இருவரை ஏற்கனவே கைது செய்துள்ளனர்.

ரூ.1 கோடி மதிப்புள்ள லம்போர்கினி காரைத் தீ வைத்து எரித்த நபர்: இதுதான் காரணம்?
இதில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் அஸ்வின்குமார் உள்ளிட்ட 2 பேர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரது மனைவி ஷீலா, மகள் தீக்ஷா, மருமகன் சக்தி சுந்தர் ஆகிய மூவரை போலீசார் இன்று கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களைக் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் தொழிலதிபருக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மற்றும் சொத்துக்களை அபகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்படும் சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *