
வஜ்ரம் என்றால் வைரம் என்று பொருள், இந்திரன் வைத்திருக்கும் ஆயுதத்தின் பெயர் வஜ்ராயுதம், பல ஆண்டுகள் நன்கு வளர்ந்து விளைந்து பருத்து பெருத்த மரத்தை வெட்டினால் அதன் நடுவில் கருமையான ரேகைகள் உடன் கூடிய தண்டுப் பாகம் தெரியும் இதை வஜ்ரம் பாய்ந்த கட்டை என்பார்கள், அப்பகுதியை சாதாரணமாகக் கோடாரியால் வெட்டுவதும், உளியினால் செதுக்குவதும் மிகவும் கடினம், அவ்வளவு அடர்த்தியாக இரும்பை போன்று அப்பகுதி இருக்கும், நம் உடலை வஜ்ரம் போல் வைத்திருக்க இந்த வஜ்ராசனம் உதவுகிறது…
செய்முறை:
சாதாரணமாக நாம் அமரும் சுகாசனத்தில் அமரவும். நிமிர்ந்துநேராக உட்காரவும். இரண்டுகால்களையும். நேராக நீட்டவும். இரண்டு கால்களையும் ஒவ்வொன்றாக மடக்கி, கால் முட்டித் தரையில்பட அமரவும். இரண்டு பாதங்களும் மேல் நோக்கிய நிலையில், அவைகளுக்கிடையே புட்டங்கள் தரையில் பட அமர வேண்டும் கால்களின் இரண்டு கட்டை விரல்களும் ஒன்றை ஒன்று பார்த்த நிலையில் இருக்க வேண்டும். கால் முட்டிகள் இரண்டும் எந்த அளவிற்கு முடியுமோ அவ்வளவிற்கு அருகருகே இருத்தல் வேண்டும் உள்ளங்கையை தொடையில் வைத்திருக்க வேண்டும் பார்வை நேராக இருத்தல் வேண்டும் இந்த ஆசணத்தை செய்து முடிக்கும் வரை மேலுடல் நேராக இருத்தல் வேண்டும்

பயன்கள்:
தொடை தொங்கு சதைகள் குறையும். முதுகுத் தண்டிற்கு நல்ல பயிற்சி கிடைக்கும். அடி வயிற்று உறுப்புகள் அவைகளுக்குரிய இடத்தில் சரியமைந்திருக்கும். முதுகுத் தண்டையொட்டியுள்ள தசைகள் உறுதியாகி பலம் பெறும். வயிற்றிற்குக் கீழ் உள்ள பகுதி பலப்படும். இறுகியிருக்கும் தசை நாறுகள், பாத எலும்புகள், கணுக் கால்கள், கெண்டைக் கால் தசைகள், தொடை தசைகள், இடுப்பு ஆகியன தள ர்ந்திடும்.நேர அளவு1 முதல் 2நிமிடங்கள்வரை செய்யலாம்.2-3 முறை செய்யலாம்.

எச்சரிக்கை:
உங்களுடைய முழங்கால்கள் காயமுற்று இருந்தாலோ அல்லது வலி இருந்தாலோ இந்த ஆசனத்தைச் செய்ய வேண்டாம்.



