
சில சமயங்களில் நாம் பள்ளியில் படித்த வருஷங்களில் நடந்த சம்பவங்கள், அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாத நினைவுகளையும் வடுக்களையும் நமக்கு விட்டுச்சென்றிருக்கலாம். துரதிர்ஷ்டவசமாக, இன்றைய நமது கல்வி முறைகளில் மாணவர்களுக்கு உண்மையானதும், நிரந்தரமானதுமான ஊக்கமும் பாராட்டும் கிடைப்பது மிகவும் அரிதாகவே உள்ளது.
அதற்கு மாறாக, “நீ எதற்கும் பிரயோஜனமற்றவன் /பிரயோஜனமற்றவள்,” “நீ தேர மாட்டாய்,” “நீ அவ்வளவு புத்திசாலி இல்லை,” அல்லது “இதைச் செய்வதற்கான திறமை உனக்கு இல்லை”… என்பன போன்ற வார்த்தைகளைக்கொண்ட கிரேடுகள், தண்டனைகள் அல்லது ஒப்பீடுகள் போன்ற செய்திகளை மட்டுமே அடிக்கடி நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம்…
ஆனால் ஆண்டவர் நம்மிடம் முற்றிலும் வித்தியாசமான ஒரு காரியத்தைக் கூறுகிறார்!
அவருடைய குரலை மட்டுமே நாம் கேட்க வேண்டும்.
ஆண்டவர் உன்னிடமும் என்னிடமும், அதாவது நம்மிடத்தில், “உனக்கு முழு திறனும் உண்டு! உனக்குக் கிறிஸ்துவின் சிந்தை இருக்கிறது… நீ புத்திசாலி மற்றும் உனக்கு எல்லா தகுதியும் உண்டு! ஆண்டவர் உன்னை நம்புகிறார். நீ ஏற்கனவே பல சவால்களைச் சந்தித்து ஜெயித்துவிட்டாய்! இன்னும் ஒரு அடி எடுத்துவைத்து, முன்னேறிச் செல்… நான் உன்னுடனே இருக்கிறேன்” என்று கூறுகிறார்.
நண்பனே/ தோழியே, இந்த வார்த்தைகள் இன்று உன் வாழ்வில் நிறைவேறட்டும். அவை உன்னைக் கைதூக்கி எடுத்து நிறுத்தட்டும்!
அவற்றை மறுபடியும் ஒருமுறை வாசித்துவிட்டு கேளு. உனக்கு முழு திறனும் உண்டு! உனக்குக் கிறிஸ்துவின் சிந்தை இருக்கிறது… நீ புத்திசாலி மற்றும் உனக்கு எல்லாத் தகுதியும் உண்டு! ஆண்டவர் உன்னை நம்புகிறார். நீ ஏற்கனவே பல சவால்களைச் சந்தித்து ஜெயித்துவிட்டாய்! ஒரு அடி எடுத்துவைத்து, முன்னேறிச் செல்… ஆண்டவர் உன்னோடு கூட இருக்கிறார்!” என்று உனக்கு நீயே அறிவித்துக்கொள்.
கூடுமானால், இந்த அழகான, நேர்மறையான பாடலைப் பாடி இன்று காலையில் ஆண்டவரை ஆராதிக்கும்படி நான் உன்னை அழைக்கிறேன்.
இதோ அந்தப் படத்திலிருந்து சில வரிகள்: “எல்லாமே முடிந்தது என்று என்னைப் பார்த்து இகழ்ந்தனர், இனி என்றும் எழும்புவதில்லை என்று சொல்லி நகைத்தனர், ஆனாலும் உங்க கரம் மீண்டும் என்னை வனைந்தது, என் உயர்வின் பெருமையெல்லாம் உம் ஒருவருக்குரியதே…”
இன்று நிறைவான ஆசீர்வாதத்தோடு வாழு!

