கர்நாடாகவைச் சேர்ந்த அரசு சுரங்க மற்றும் தொல்லியல் துறை அதிகாரி பிரதீமா கொலை வழக்கில் கார் ஒட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களுரு சுப்ரமனிய புராவில் வசித்து வரும் 45 வயதான பிரதீமா கனிமவள மற்றும் தொல்லியல் துறை அதிகாரி நவம்பர் 6-ஆம் தேதி அவரது இல்லத்தில் கடுமையாக தாக்கப்பட்டு இறந்து கிடந்தார். இந்நிலையில் கார் ஓட்டுநரை கைது செய்துள்ளது காவல்துறை.
கடந்த 5 ஆண்டுகளாக ஒப்பந்த அரசு ஊழியராக இருந்த ஓட்டுநர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை பணி நீக்கம் செய்ததால் தான் கொலை செய்ததாக கூறினார். ஓட்டுநரின் பெயர் கிரண் என்றும், அவர் பெங்களூரிலிருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள சாம்ராஜ் நகருக்கு தப்பிச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நவம்பர் 5-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணி வரை அலுவலகத்தில் இருந்துள்ளார். அதற்குப் பிறகு வீடு திரும்பியுள்ளார். காரை ஓட்டி வந்தவர் கிரனுக்கு பதிலாக பணியில் அமர்த்தப்பட்டவர் என்பது தெரிகிறது. இரவு 8 மணிக்கு வீடு வந்து சேர்ந்துள்ளார். இவரின் கணவர் மற்றும் மகன் ஷிமோகா சென்றிருந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கழுத்தை நெரித்தும், பலமாக தாக்கி கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் கூறும் போது மிகவும் நேர்மையான நன்கு பணி செய்யக்கூடியவர். மிகவும் தைரியசாலி சமீபத்தில் பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுத்து தக்க நீதி வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.