டேபிள் டென்னிசில் பதக்கம் வென்ற சஹானா ரவிக்கு ரூ.30 இலட்சம் ஊக்கத்தொகை.!

ஜப்பானில் நடைபெற்ற 5-ஆவது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியின் டேபிள் டென்னிஸ் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு  30 இலட்சம் ரூபாய்  ஊக்கத்தொகை வழங்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஜப்பானில் நடைபெற்று வரும் 5-ஆவது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை பேபி சஹானா ரவிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பேபி சஹானாவின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் 30 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளார். வீராங்கனை பேபி சஹானாவின் வெற்றி தமிழ்நாட்டின் இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *