தாராபுரம் வேட்பாளர் கார்த்திகா உள்பட 7 பேர் கைது – சீமான் கண்டனம்.!

தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட கார்த்திகா  உள்ளிட்ட 7 பேரைப் பொய் வழக்கில் கைது செய்திருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட கார்த்திகா, அவர் கணவர் முருகசந்திரகுமார் உள்ளிட்ட 7 பேரைப் பொய் வழக்கில் அரசியல் பழிவாங்கும் நோக்கோடு கைது செய்திருப்பதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கரூர் பேரவலத்தின்போது ஒரு மாதக் காலம் வழக்குக்கும், கைதுக்கும் பயந்துகொண்டு முதலமைச்சர் விஜயும், தவெக கட்சியின் மொத்த நிர்வாகிகளும் ஓடி ஒளிந்து கொண்டதுபோல், எந்நாளும் தன்னுடைய கட்சியினர் ஓடி ஒளிந்தது இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் பழிவாங்குவதில் கவனம் செலுத்தும் இந்த ஆட்சியும், அதிகாரமும் விரைவில் வீழும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *