அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் காலமானார்!

Advertisements

அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் காலமானார். அவருக்கு வயது (85).

லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சையின்போது தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் உயிரிழந்ததை அவரது சீடர் பிரதீப் தாஸ் உறுதிப்படுத்தினார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

மூளை பக்கவாதம் காரணமாக ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவனை நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் அவர் இன்று காலமானார். அவரது உடல் நாளை அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் தகனம் செய்யப்படும்.

தற்போது அவரது உடல் லக்னோவிலிருந்து புனித நகரத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது என்று கூறினார்.

ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் மறைவுக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர்வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் மறைவு ஆன்மிக உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *