ஆஸ்திரேலியாவில் தாக்குதல் நடத்தியவர் இந்தியர்: பிலிப்பைன்ஸ் தகவல்.!

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரின் போண்டி பீச் பகுதியில் கூடியிருந்த யூத மக்களை நோக்கி இருவர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 15 பேர் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதலை நடத்திய ஷாஜித் அக்ரம் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது, மகன் நவீத் அக்ரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் , ஷாஜித் அக்ரம் பற்றி அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இவர், இந்தியாவை சேர்ந்தவர் என்று பிலிப்பைன்ஸ் நாடு தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் இவர்கள் இருவரும் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டு குடியுரிமைத்துறை செய்தி தொடர்பாளர் டானா சான்டோவால் கூறுகையில், ” கடந்த நவம்பர் 1ம் தேதி இருவரும் பிலிப்பைன்ஸ் வந்திருந்தனர். இங்கு, மின்டனா தீவிலுள்ள டாவோ நகருக்கு சென்றனர்.

இதில், ஷாஜித் அக்ரம் இந்தியர். ஆஸ்திரேலியாவில் வசிப்பவர். நவீத் அக்ரம் பிறப்பால் ஆஸ்திரேலியர். நவம்பர் 28ம் தேதி டாவோவில் இருந்து மணிலா வந்து சிட்னிக்கு புறப்பட்டு சென்றனர் ”என்று தெரிவித்துள்ளார். டாவோ நகரம் தெற்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் நுழைவு வாயில் என்று கருதப்படுகிறது. ஐஸ்ஐஎஸ் அமைப்பினர் ஏராளமானோர் இந்த நகரில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2017ம் ஆண்டு மின்டனா தீவிலுள்ள மாரவி என்ற நகரை ஐ.எஸ். இயக்கத்தினர் கைப்பற்றினர்.

பின்னர், பிலிப்பைன்ஸ் படைகள் 5 மாத காலம் போராடி ஐ.எஸ் இயக்கத்தினரிடம் இருந்து மாரவி நகரை மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ஷாஜித் அக்ரம் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்கிற தகவல் வெளியானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *