உடையும் அதிமுக பாஜக கூட்டணி: கடைசி காரணம் இதுதான்.!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே அரசியல் ரீதியான மோதல்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன. வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜக தமிழ்நாடு ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்கிற ரீதியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏராளமான திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தி வருகிறார்.

அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் கிட்டத்தட்ட அதிமுகவை டெல்லி பாஜக மேலிடம் கையில் எடுத்துக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமியை தலையாட்டி பொம்மையாக செயல்பட வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இருக்கிறது. அதேசமயம் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் எனது கொள்கைகள் மற்றும் திட்டங்களில் இருந்து ஒருபோதும் நான் பின்வாங்க மாட்டேன் என்பதில் எடப்பாடி பழனிச்சாமி மிக உறுதியாக இருக்கிறார் .

இவர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்று வரும் பனிப்போர் இறுதிக்கட்டமாக அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இடையே முறிவு ஏற்படும் சூழ்நிலையை எட்டி இருக்கிறது. டெல்லி சென்ற நைனார்நாகேந்திரன் இடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏராளமான விஷயங்களை பேசி இருக்கிறார். அவை அனைத்தும் தமிழக அரசியலில் அமித்ஷா நடத்த போகும் அதிரடி திட்டங்கள் ஆகும்.

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தேன் வேறு எதுவும் இல்லை என்று சொல்லும் நயினார் நாகேந்திரன் உண்மையில் ஏராளமான திரை மறைவு விஷயங்களை பேசிவிட்டு தான் வந்திருக்கிறார். அவர் அமித்ஷாவை சந்தித்து சென்னை திரும்பியநிலையில் அதிமுக பாஜக கூட்டணி இடையே மிகப்பெரிய பிளவு ஏற்பட காத்திருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழக சட்டசபை தேர்தல் நிலவரம் குறித்து ஒரு உளவுத்துறை ரிப்போர்ட் டெல்லிக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. அதில், வருகிற சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவும். திமுகவுக்கு 40 சதவீத வாக்குகள் நிலையாக இருக்கிறது. இந்த வாக்கு வங்கிகள் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது . அதே வேளையில் அதிமுக கூட்டணிக்கு 32 சதவீத வாக்குகள் இருக்கிறது நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்திற்கு 20 சதவீத வாக்குகள் இருக்கிறது.

இதில் முக்கியமாக அதிமுகவை பொருத்தவரையில் சரியான கூட்டணி அமைந்தால் மட்டுமே 32 சதவீத வாக்குகளையாவது பெற முடியும். அதே சமயம் வலுவான கூட்டணி அமைந்தால் அதிமுக வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என ஒரு உளவுத்துறை அறிக்கை டெல்லி பாஜக மேல் இடத்திற்கு சென்று இருக்கிறது.அந்த வகையில் வட மாநிலங்கள் அனைத்திலும் பாஜக கோலுன்றிய நிலையில் தமிழகத்தை எப்படியாவது இந்த முறை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என டெல்லி பாஜக மேலிடம் பல விதமான திட்டங்களை தயாரித்து வருகிறது

இதன் கிளைமாக்ஸ் காட்சியாக பிரதமர் மோடி பொங்கல் திருவிழாவை கொண்டாடுவதற்காக தமிழகம் வருகிறார் இது மட்டுமல்ல தேர்தலுக்கு முன்பாக அவர் ஐந்து முறை தமிழகம் வந்து பிரச்சாரம் செய்வதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே அதிமுக வெற்றி பெற வேண்டுமானால் முதல் கட்டமாக கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியாக இருக்கிறார்.

அந்த வகையில் ஓ பன்னீர்செல்வம் டிடிவி தினகரன் சசிகலா ஆகியோரை இணைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்தார் ஆனால் அவர்கள் யாரையும் இணைத்துக் கொள்ள முடியாது என்பதில் எடப்பாடி பழனிச்சாமி மிக உறுதியாக இருக்கிறார். இதனால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களை பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்த்துக் கொள்ளலாம் என புதிய திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே அன்புமணி தரப்பிலான பாட்டாளி மக்கள் கட்சி ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தி இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மருத்துவர் ராமதாஸ் அன்புமணி ஆகிய இருவரையும் மீண்டும் ஒன்றாக இணைத்து விடலாம் என பாஜக மேலிடம் பல விதமான முயற்சிகளை செய்தது.  ஆனால் மருத்துவர் ராமதாஸ் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. எனவே அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியை சேர்த்துக் கொள்ளலாம் என டெல்லி பாஜக மேலிடம் இறுதி முடிவு எடுத்துவிட்டது.

இதனிடையே பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைப்பதை விட பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரையில் வருகிற தேர்தலுக்கு தேவையான பண செலவுகளை ஏற்றுக்கொள்வதாக பிரேமலதா விஜயகாந்த் இடம் பேசி இருக்கிறார்கள்.  எனவே தேமுதிக இந்த முறை பாரதிய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என தெரிகிறது.

இது மட்டுமல்லாமல் டாக்டர் கிருஷ்ணசாமி ஜான் பாண்டியன் பாரிவேந்தர் போன்றவர்களும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுவிதமான திட்டங்களை வகுக்கத் தொடங்கி இருக்கிறார்.தான் எடுக்கும் முடிவுகளுக்கு மறுப்பு தெரிவித்து வரும் எடப்பாடி பழனிச்சாமியை கூட்டணியில் இருந்து ஏன் கழற்றி விடக்கூடாது என அவர் ஆலோசித்து வருகிறார்.

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஒரு புதிய கூட்டணியை உருவாக்கி தமிழக தேர்தல் களத்தில் நேரடியாக போட்டியிடுவது என முடிவெடுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த ஆலோசனைகளின் பெயரில்தான் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு அழைக்கப்பட்டார் . ஏற்கனவே அண்ணாமலையை அழைத்து சில திட்டங்களை அமித்ஷா வகுத்துக் கொடுத்திருக்கிறார்.  தற்பொழுது நயினார் நாகேந்திரன் இடமும் சில விஷயங்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்துஅதிமுக பாஜக இடையே இறுதிக்கட்ட மோதல் ஒன்று நடைபெற காத்திருக்கிறது. நைனர் நாகேந்திரன் டெல்லிக்கு கிளம்பி செல்வதற்கு முன்பாக அவரிடம் ஒரு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது அதாவது தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி எந்தெந்த தொகுதியில் செல்வாக்கு பெற்று இருக்கிறது என்பது தொடர்பான பட்டியலை தயாரித்து கொண்டு டெல்லி வரும் படி உத்தரவிடப்பட்டது.

அதன் பேரில் தான் நைனார் நாகேந்திரன் டெல்லிக்கு விரைந்து சென்றார்.அப்போது தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக 65 தொகுதிகள் இருப்பதாக ஒரு பட்டியலை அமிச்ஷாவிடம் நைனார் நாகேந்திரன் கொடுத்திருக்கிறார். அந்தப் பட்டியலில் சென்னையை பொருத்தவரையில் எழும்பூர் துறைமுகம் , ஆயிரம் விளக்கு , மயிலாப்பூர் , தி நகர்  , விருகம்பாக்கம் , வேளச்சேரி ஆகிய தொகுதிகள் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர கன்னியாகுமரி , குளச்சல்,  கிள்ளியூர் , நாகர்கோவில் , நெல்லை,  மதுரை வடக்கு , பரமக்குடி , சாத்தூர்,  பட்டுக்கோட்டை , நாங்குநேரி,  கோவை , வடக்கு கோவை ,  தெற்கு கவுண்டம்பாளையம், பல்லடம் , சூலூர்,  சிங்காநல்லூர் உள்பட 65 தொகுதிகளில் பாஜக பலமாக இருக்கிறது. என நைனார் நாகேந்திரன் தெரிவித்திருக்கிறார்.

இது மட்டுமல்லாமல் தென்காசி , தூத்துக்குடி,  ஓட்டப்பிடாரம் , அருப்புக்கோட்டை , பரமக்குடி,  போடிநாயக்கனூர் மற்றும் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் குடியாத்தம் கே வி குப்பம் என ஏராளமான தொகுதிகளை நயினார் நாகேந்திரன் பட்டியலிட்டு கொடுத்திருக்கிறார். தற்பொழுது இறுதி முடிவாக அதிமுகவில் இருந்து 55 தொகுதிகள் ஒதுக்கி தந்தால் மட்டுமே கூட்டணி அமைக்க வேண்டும். இல்லை என்றால் வேறு விதமான திட்டங்களை வகுக்க வேண்டும் என டெல்லி பாஜக தீவிரமாக களம் இறங்கி இருக்கிறது.

அதேசமயம் பாரதிய ஜனதா கட்சிக்கு 30 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கி தர முடியும் அதுவும் தொகுதி பற்றிய முடிவுகளை அதிமுக தான் தெரிவிக்கும் பாரதிய ஜனதா கட்சி நினைப்பது போல் அவர்கள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்கி தர முடியாது . அவற்றில் பெரும்பாலானவை அதிமுக செல்வாக்கு பெற்றவை என்ற முடிவில் இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

தற்பொழுது தொகுதி பங்கீடு தான் அதிமுக பாஜக இடையே மிகப்பெரிய மோதலை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே தமிழக அரசியலில் அண்ணாமலைக்கும் நைனார் நாகேந்திரனுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை இரண்டு பகுதிகளாக பிரித்து டெல்லி பாஜக மேலிடம் வழங்கியிருக்கிறது.

ஓ பன்னீர்செல்வம் டிடிவி தினகரன் சசிகலா போன்றோரை ஒருங்கிணைக்கும் பணி அண்ணாமலை வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது தொகுதி பங்கீடுகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து எடப்பாடியிடம் பேசுவதற்கு நைனார நாகேந்திரனை நியமித்திருக்கிறது. எனவே அண்ணாமலையும் நைனார் நாகேந்திரனும் இனி தனித்தனியாக பணி செய்வார்கள் அவர்களுக்குள் மோதல் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.

அதிமுகவை விட்டு பாரதிய ஜனதா கட்சி விலகி நின்றால் வருகிற சட்டமன்றத் தேர்தலில் ஐந்து முனை போட்டி நிலவும் சூழ்நிலை ஏற்படுகிறது இதன் மூலம் வெற்றி வாய்ப்பு என்பது இழுபறியாக முடிவடையும் சூழ்நிலையும் ஏற்படலாம். இதற்கிடையே திமுகவிலும் காங்கிரஸ் பக்கம் மோதல் போக்கு ஆரம்பம் ஆகி இருக்கிறது. திமுக காங்கிரஸ் கூட்டணியும் உடையும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.

கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் குழுவினர் டெல்லி சென்று தங்களது கருத்தை மேல் இடத்தில் தெரிவித்து வருகிறார்கள். டெல்லி சென்ற ஐவர் குழுவினர் . இதேபோல் கூடுதலாக தொகுதிகளை ஒதுக்கி தராவிட்டால் தமிழக வெற்றிக்கழகத்துடன் இணையலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. இருந்தபோதிலும் இறுதி கட்டமாக திமுக தரப்பில் காங்கிரசை சமாதானப்படுத்தும் வகையில் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கி தரப்படும் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *