
ஆஸ்திரேலிய அணி வெற்றி!
பெங்களூரு: உலகக்கோப்பை தொடரின் இன்றைய 18வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் மோதின. பெங்களூருவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். தொடக்கம் முதலே இரு வீரர்களும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை பவுண்டரிகள், சிக்சர்களாக நாலாபுறமும் சிதறடித்த வார்னர், மார்ஷ் சதம் விளாசினர்.
அதிரடியாக ஆடிய மார்ஷ் 108 பந்துகளில் 10 பவுண்டரிகள், 9 சிக்சர்களுடன் 121 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். அடுத்துவந்த மேக்ஸ்வெல் ரன் எதுவும் எடுக்காமல் (0) அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.கடைசியாக ஆஸ்திரேலிய அணி 50 ஒவரில் 9விக்கெட்டுகளை இழந்து367 ரன்களை எடுத்தது.அதனைத் தொடர்ந்து 368ரன்களை எடுத்தால் வெற்றியெனக் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
கடைசியாகப் பாகிஸ்தான் அணி 45.3 ஒவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்களை எடுத்துத் தோல்வி அடைந்தது.



