Attur: ஆசிரியர் அடித்ததால் கண் பார்வையை இழந்த பள்ளி மாணவி!

Advertisements

தலைவாசல் அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அடித்ததால் இடது கண் பார்வை இழந்த பள்ளி மாணவிஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆத்தூர் ஆர்.டி.ஓ., டி.எஸ்.பி., அலுவலகத்தில் மனுஅளித்தார்.

ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த, தலைவாசல், மும்முடி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். கூலித் தொழிலாளியான இவரது மகள் கங்கையம்மாள், 10. இவர், தலைவாசல் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றார்.இவர் கடந்த, 2023, டிசம்பர், 22-ம் தேதி பள்ளியில் வகுப்பறையில் இருந்த போது, பள்ளியின் தலைமை ஆசிரியரும், வகுப்பு ஆசிரியருமான திருமுருகவேள் என்பவர் பாடம் நடத்தியுள்ளார்.

அப்போது மாணவிகளிடம் பாடம் நடத்தியது குறித்து கேள்வி எழுப்பினார். மாணவி கங்கையம்மாள் அருகில் இருந்த மாணவியை அடிப்பதற்காக குச்சியை தூக்கி வீசி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கங்கையம்மாள் இடது கண் மீது குச்சி விழுந்ததில் அலறி துடித்துள்ளார்.

தொடர்ந்து அவருக்கு தலைவாசல் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் ஆத்தூரில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து சேலம், மதுரை உள்ளிட்ட தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கண் பரிசோதனை செய்ததில் 95 சதவீதம் கண்பார்வை இழந்துள்ளதாக தெரியவந்தது.

இதை எடுத்து குமார் தங்களது குடும்பத்தாரோடு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் திருமுருகவள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆத்தூர் ஆர்.டி.ஓ., ரமேஷ் மற்றும் ஆத்தூர் டிஎஸ்பி நாகராஜன் ஆகியோரிடம் சந்தித்து மனு அளித்துள்ளனர்.

மனுவை பெற்றுக் கொண்ட ஆத்தூர் ஆர்.டி.ஓ., ரமேஷ் இதுகுறித்து, கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் மீது துறைரீதியான விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *