
நடிகை அதுல்யா ரவி, சேலையில் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் வைரல் பெண்ணாக வலம் வந்தவர் நடிகை அதுல்யா ரவி.காதல் கண்கட்டுதே’ படத்தின் மூலம் ஹீரோயினாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அதுல்யாவுக்கு பட வாய்ப்புகள் தேடி வரத் தொடங்கியது.
அதன்படி சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ஏமாளி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் பயணித்து வந்தாலும் இவரின் ஒரு படம் கூடப் பிளாக்பஸ்டர் ஹிட்டாகவில்லை. இதனால் கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய அதுல்யா, முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் அதிக கவர்ச்சி காட்டி நடித்து இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தார்.
திரைப்படங்களைத் தொடர்ந்து சோசியல் மீடியாக்களிலும் கவர்ச்சி காட்டும் புகைப்படத்தை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் சேலையில் கலக்கல் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.


