Seyyed Ali:அரபு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை..!எந்தச் சூழலிலும், இஸ்ரேலுக்கு உதவி செய்ய கூடாது!

Advertisements

தெஹ்ரான்: ‘ஈரானுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த, எந்தவொரு சூழலிலும், இஸ்ரேலுக்கு உதவி செய்ய வேண்டாம்’ என அரபு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

லெபனான், காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இந்நிலையில், இன்று(அக்.,12) ஈரானின் மூத்த தலைவர் சயீத் அலி ஹொசைனி கமேனி கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு, மத்தியில் அரபு நாடுகள், இஸ்ரேலுக்கு உதவ வேண்டாம். அரபு நாடுகள் தங்களின் வான்வழி மற்றும் ராணுவ தளங்களை இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பயன்படுத்த அனுமதித்தால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும். இஸ்ரேலுக்கு உதவினால் நிலைமை மோசமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *