Atharvaa Next Movie: சிவா மனசுல சக்தி பட இயக்குனருடன் இணையும் அதர்வா, அதிதி ஜோடி!

Advertisements

பிரபல திரைப்பட இயக்குனர் எம். ராஜேஷ் நடிகர் அதர்வா, நடிகை அதிதி ஆகியோரை வைத்துப் புதிய படத்தை இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல திரைப்பட இயக்குனர் எம். ராஜேஷ் நகைச்சுவை திரைப் படங்களை உருவாக்குவதில் சிறப்புப் பெற்றவர். இவர் ‘சிவா மனசுல சக்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற வெற்றித்திரைப்படங்களை இயக்கிப் பெற்றவர்.

இந்நிலையில் தற்போது எம். ராஜேஷ் அதர்வா, அதிதி ஆகியோரை வைத்துப் புதிய படத்தை இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஜெயம் ரவியின் ‘பிரதர்’ திரைப்படத்தை எம்.ராஜேஷ் இயக்கி வருகிறார். எனவே இப்படத்திற்குப் பின் அதர்வா – அதிதி நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

இவர்கள் இருவரும் முதல் முறையாக இப்படத்தில் இணைய உள்ளனர். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி, கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடித்திருந்தார்.

இப்படத்திலும் இவருக்கு இருந்தது. ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தைப் பிடித்துள்ள இவர் அடுத்தடுத்த படங்களைக் குபடங்களைக் குவித்துவித்து வருகிறார். தற்போது விஷ்ணு வர்தன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துவரும் அதிதி அடுத்ததாகச் சூர்யாவின் புறநானூறு திரைப்படத்திலும் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *