தந்தை, மகனை வீழ்த்திய முதல் இந்தியர்.. வெஸ்ட் இண்டீஸில் அஸ்வின் சாதனை!

Advertisements

ஷிவ்நரைன் சந்தர்பால், தேஜ்நரைன் சந்தர்பால் என்று தந்தை மற்றும் மகன் இருவரையும் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். ஒரு காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் என்றாலே சர்வதேச கிரிக்கெட்டில் பயம் பற்றிக் கொள்ளும். அந்த அளவிற்கு வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

Advertisements

அந்த வரிசையில் கடைசியாக அனைத்து நாட்டு ரசிகர்களும் ரசித்து கொண்டாடிய பேட்ஸ்மேன் ஷிவ்நரைன் சந்தரபால். மூன்று ஸ்டெம்புகளையும் காட்டி நிற்கும் சந்தர்பால், பந்து வீச்சாளரின் வேகத்துக்கு ஏற்ப ஸ்டெம்புகளை நோக்கி நகர்ந்து பந்தை பவுண்டரிக்கு விரட்டி வித்தை காட்டுவார். இவரது கிளாசிக் பேட்டிங்கை ரசிகர்கள் ரசித்து கொண்டாடினர். இந்த நிலையில் சந்தர்பாலின் மகன் தேஜநரைன் சந்தர்பால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆடி வருகிறார்.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது தேஜ்நரைன் சந்தர்பால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அறிமுகமானார். இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் களமிறங்கினார். தொடக்கம் முதலே இந்திய வீரர்களின் பந்துகளை நிதானமாக எதிர்கொண்டார். இதன் காரணமாக ரோகித் சர்மா ரவிச்சந்திரன் அஸ்வினை அட்டாக்கில் கொண்டார். ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய 3வது ஓவரிலேயே தேஜ்நரைன் சந்தர்பால் 12 ரன்கள் எடுத்து போல்டாகி வெளியேறினார். இதன் மூலம் தந்தை மற்றும் மகன் இருவரையும் வீழ்த்திய முதல் இந்திய என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.

மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை படைத்தார். இந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் படைத்தார்.

2011ஆம் ஆண்டு நவ.8ல் டெல்லியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஷிவ்நரைன் சந்தர்பால் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தி அசத்தினார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய பிளேயிங் லெவனில் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த அஸ்வின், இந்திய அணி வீரர்கள் நண்பர்கள் என்ற நிலையில் இருந்து உடன் விளையாடுபவர்கள் என்ற நிலைக்கு மாறிவிட்டதாக தெரிவித்திருந்தார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் முதல் விக்கெட்டை வீழ்த்தி தான் யார் என்பதை இந்திய அணிக்கும், ரோகித் சர்மாவுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *