
அசாமில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
அசாமில் மூன்றாவது முறையாக பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப் பெற்றுள்ளது.
இதையடுத்து, அசாம் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி கவுகாத்தியில் உள்ள லோக்பிரியா கோபிநாத் போர்டோலாய் சர்வதேச விமான நிலையத்தில் வருகைத் தந்தார். அப்போது, முதலமைச்சராக பதவியேற்கவுள்ள ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் பிற பா.ஜ.க. தலைவர்கள் மோடியை வரவேற்றனர்.
இது தொடர்பாக முதலமைச்சராக பதவியேற்கவுள்ள ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், அசாமிற்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு அன்பான வரவேற்பு அளிப்பதாகக் கூறினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொடர்ச்சியான மூன்றாவது பதவிக்காலத்தை இந்த மாநிலம் காணவிருப்பதால், அவரது வருகை அசாம் வரலாற்றில் ஒரு மகத்தான தருணத்தைக் குறிக்கிறது என்று தெரிவித்தார். பிரதமரின்



