பெண்களுக்கு ₹3000…! ஜூன் 1 முதல் மாநிலம் முழுவதும் அமல்…!

Advertisements

ஜுன் 1 ஆம் தேதி முதல் பெண்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி வேட்பாளர் சுவேந்து அதிகாரி முதல்வராகப் பொறுப்பேற்றார். அவர், பாஜக தேர்தல் அறிக்கையில் கொடுத்த பெண்களுக்கு இலவச பயணம் வாக்குறுதி குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதில், ஜூன் 1 ஆம் தேதி முதல் மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்தார். இதுபோல், அண்ணபூர்னா பந்தர் திட்டத்தின் கீழ், ஜூன் 1 ஆம் தேதி முதல் பெண்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமும் அமலுக்கு வர உள்ளது என்று தெரிவித்தார். மேலும், மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத், ஜூன் 1 ஆம் தேதி முதல் மாநிலத்தில் அமல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

இதன்மூலம் ஏழை எளிய மக்களுக்குத் தரமான மருத்துவச் சிகிச்சைகள் இலவசமாகக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *