Ashok Gehlot: மாட்டு சாணம் கிலோ ரூ.2!

மாட்டு சாணம் கிலோ ரூ.2க்கு கொள்முதல்!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மாட்டு சாணம் கிலோ ரூ.2க்கு கொள்முதல் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் வாக்குறுதி அளித்தார்.

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் நவம்பர் 25ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. டிசம்பர் 3ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. அங்கு ஆட்சியை தக்க வைக்க காங்கிரசும், அதிகாரத்தை கைப்பற்ற பா.ஜ.,வும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் ஏழு வாக்குறுதிகளை அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

குடும்பத் தலைவிக்கு ஆண்டுதோறும் ரூ.10,000 வழங்கப்படும்.மாட்டு சாணம் கிலோ 2 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும்.அரசு கல்லூரியில் சேரும் முதலாமாண்டு மாணவர்களுக்கு லேப்டாப் அல்லது டேப்லெட் வழங்கப்படும்.இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.15 லட்சம் வரை இலவச காப்பீடு அளிக்கப்படும்.ஒவ்வொரு மாணவருக்கும் ஆங்கில வழிக் கல்விக்கான உத்தரவாதம் அளிக்கப்படும்.

1 கோடி குடும்பங்களுக்கு ரூ.500க்கு காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்என ஏழு வாக்குறுதிகளை அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *