Arulmigu Mariamman Temple Samayapuram: ஒரு கோடிக்கு மேல் உண்டியல் காணிக்கை வசூல்!

Advertisements

பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாகக் ஒரு கோடியே 23,லட்சத்து 33, ஆயிரம் 258ரூபாய் ரொக்கமாக வசூலாகியுள்ளது.

பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில்ரூ.ஒரு கோடியே 23,லட்சத்து 33, ஆயிரம் 258ரூபாய் ரொக்கம், 1, கிலோ 269, கிராம் தங்கம், 3, கிலோ 315.கிராம் வெள்ளி மற்றும் 169. அயல்நாட்டு நோட்டுகள், 704 அயல் நாட்டு  நாணயங்கள் காணிக்கையாகக் கிடைத்தன.

தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குத் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றி உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

அவ்வாறு பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை கோவில் நிர்வாகம் சார்பில் மாதம் இருமுறை எண்ணப்படுவது வழக்கம்.அதன்படி கோவில் இணை ஆணையர் முன்னிலையில் பக்தர்கள் காணிக்கை செலுத்திய உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணியதில் ரூ.ஒரு கோடியே 23,லட்சத்து 33, ஆயிரம் 258ரூபாய் ரொக்கம், 1, கிலோ 269, கிராம் தங்கம், 3, கிலோ 315.கிராம் வெள்ளி மற்றும் 169. அயல்நாட்டு நோட்டுகள், 704 அயல் நாட்டு நாணயங்கள் காணிக்கையாகக் கிடைத்தன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *