R.P.V.S. Manian: ஆன்மிக சொற்பொழிவாளர் கைது!

கைது செய்யப்பட்ட ஆர்பிவிஎஸ் மணியனை ரகசிய இடத்தில் வைத்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்… R.P.V.S. Manian

சென்னை: ஆன்மிக சொற்பொழிவாளரும், விஷ்வ பரிஷத் இயக்கத்தின் முன்னாள் மாநில தலைவருமான ஆர்பிவிஎஸ் மணியனை இன்று அதிகாலை 3.30 மணியளவில் தனிப்படை போலீசர் கைதுசெய்தனர்.

ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் அம்பேத்கரை பற்றி அவதூறாகப் பேசிய வழக்கில் அவர் தி.நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்துக் கைதுசெய்யப்பட்டார்.இவர் அம்பேத்கரை பற்றி அவதூறாக என்ன பேசினார் என்பது பற்றியும், இவர்மீது என்ன வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் தெரியவரவில்லை.

கைதுசெய்யப்பட்டுள்ள ஆர்பிவிஎஸ் மணியனை ரகசிய இடத்தில் வைத்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *