Sabarimala Makaravilakku Festival: 13 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்!

ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பால்13 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள்சாமி தரிசனம் செய்தனர்.

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டடு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில்எதிர்வரும் 15ம் தேதி சபரிமலையில் மகர விளக்குப் பூஜை ஜோதி தரிசனம் செய்ய உள்ள நிலையில் பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக அதிக பக்தர்கள் சன்னிதானத்திற்கு வருகை தந்துள்ளனர் இதனால் சன்னிதானத்தில் 13 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக நீலிமலை ஏற்றோம் மர கூட்டம் சரங்குத்தி உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பு அமைத்துப் பக்தர்கள் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது மேலும் 18-ம் படி நடைபந்தல் உள்ளிட்ட பகுதிகளிலும் கட்டுக்கடங்காத கூட்டம் நெரிசல் காண்பதால் சன்னிதானத்தின் உள்ள மேல் நடைபெறுதலில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது இன்று வருகை தந்த பக்தர்கள் 13 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *