கழற்றி விட்ட காதலன் பரிதபிக்கும் காதலி!

Armed Reserve Police | Live in Relationship | Tamil Nadu | Cheat

திருவாரூர் அருகே பதிவுத் திருமணம் செய்துவிட்டு தலைமறைவானதாக ஆயுதப்படை காவலர் வீட்டின் முன்பு நள்ளிரவில் தர்ணா போராட்டம் நடத்திய பெண் போலீஸ்…

சென்னை : சென்னையில் ஆயுதப்படை காவலராக இருக்கும் மதுமிதா தன்னுடன் பணிபுரியும் தண்டலையை சேர்ந்த அஜித்தை காதலித்து மூன்று வருடமாக ஒரே வீட்டில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் மதுமிதா கர்ப்பமடைந்தார். இந்த நிலையில் அஜித்துக்கு வேறு பெண்ணைப் பேசி முடித்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, சென்னையில் மதுமிதா புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 10 அன்று அஜித், மதுமிதாவின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோவிலில் மாலை மாற்றிக் கொண்டு, பெரியமேடு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்.

Armed Reserve Police | Live in Relationship | Tamil Nadu | Cheat

திருமணம் முடிந்த இரண்டே நாளில் நண்பர் வீட்டிற்கு போவதாகக் கூறிச் சென்ற அஜித் திரும்ப வராததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். மதுமிதா திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்தில் இன்று புகார் அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *