
2024ம் ஆண்டு 100 கோடி வசூல் செய்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை அரண்மனை 4 படம் பெற்றுள்ளது.
சுந்தர் சி இயக்கி நடித்துள்ள அரண்மனை 4 படம் கடந்த மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அவ்னி சினிமாக்ஸ் பேனரின் கீழ் குஷ்பு சுந்தர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்,
இந்தப் படத்தில் தமன்னா, ராஷி கன்னா, கோவை சரளா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் மற்ற தமிழ் படங்களால் செய்ய முடியாத சாதனையை அரண்மனை 4 செய்துள்ளது.. ஆம். உண்மை தான். 2024 தொடங்கியது முதல் எந்தப் படமும் தமிழ்நாட்டின் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியைப் பெறவில்லை, இருப்பினும், அரண்மனை 4 வசூலில் சாதனை படைத்துள்ளது.
2024ம் ஆண்டு 100 கோடி வசூல் செய்த முதல் தமிழ் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தைத் தயாரித்த அவ்னி தயாரிப்பு நிறுவனம் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்தப் பதிவில் “தியேட்டர்களில் ஒரு கொண்டாட்டம், பாக்ஸ் ஆபிஸில் ஒரு நிகழ்வு, உலகளவில் ரூ 100 கோடி வசூலித்த 2024 இன் முதல் தமிழ் திரைப்படம். இது நீங்கள் எங்களுக்குத் தந்த அன்பு” என்று தெரிவித்துள்ளது..
சில நாட்களுக்கு முன்பு அரண்மனை 4 தமிழ் மொழியில் ரூ 56.50 கோடியும் மற்றும் தெலுங்கு பதிப்பில் ரூ 5.50 கோடி வசூல் உட்பட உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் சுமார் ரூ 63 கோடி வசூலித்துள்ளது. மஞ்சுமேல் பாய்ஸ் என்ற மலையாள படத்தின் வசூலை தமிழக பாக்ஸ் ஆபிஸில் முறியடித்தது.
அரண்மனை 4 படத்தின் வெளிநாட்டு வசூல் 16 கோடி ரூபாய் ஆகும். இந்த ஆண்டு ஜனவரியில் வெளியான அயலான் படத்தின் லைஃப் டைம் வசூல் ரூ.76.50 கோடிகள் ஆகும். இந்தப் படம் அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது.


