பாமக யாருடன் கூட்டணி?

திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் அவசர நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அவசர நிர்வாக குழு கூட்டம் நேற்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. 21 பேர் கொண்ட நிர்வாக குழு கூட்டத்தில் பாமகவின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி. செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, பொருளாளர் சையத் மன்சூர் உசேன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்த அவசர நிர்வாக குழு கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் ராமதாஸ் எந்த கூட்டணியில் இணைவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ள சூழலில் இன்றைய நிர்வாக குழு கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட்டது .

மேலும் , சேலம் சட்டமன்ற உறுப்பினர் அருள் பேசும்போது ,  வெற்றி பெறும் கூட்டணியில் செல்வோம் அதனை ராமதாஸ் பிப்ரவரி இறுதியில் அறிவிப்பார். நிச்சயமாக கூட்டணியில் தான் போட்டியிடுவோம் பாமகவுக்கு இந்த நெருக்கடியும் இல்லை 234 தொகுதிக்கும் வேட்பாளர் பட்டியல் தயாராக உள்ளது என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *