Sekar babu: புயல், மழை, வெள்ளம் வந்தாலும் திமுகவை அசைத்துப்பார்க்க முடியாது!

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய விஜய், இந்த நாட்டைப் பாழ்படுத்தும் பிளவுவாத அரசியல் செய்வோர்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை ரீதியான முதல் எதிரி.

திராவிட மாடல் ஆட்சி என்று பெரியார், அண்ணா பெயரை வைத்துத் தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளையடிக்கும் ஒரு குடும்ப சுயநலக்கூட்டம் தான் அடுத்த அரசியல் எதிரி. கொள்கை, கோட்பாடு அளவில் தேசியத்தையும், திராவிடத்தையும் பிரித்துபார்க்க போவதில்லைஎன்று பேசியுள்ளார்.

விஜய்யின் இந்தப் பேச்சுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளதாவது:- “திமுக கூடி கலையும் மேகக்கூட்டங்கள் இல்லை கொள்கை கூட்டம். எந்தச் சக்தியாலும் திமுகவை அசைத்துப் பார்க்க முடியாது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளவரை எந்தச் சக்தியாலும் திமுகவை அசைத்துக்கூட பார்க்க முடியாது. புயல், மழை, வெள்ளம் வந்தாலும் திமுகவை அசைத்துப்பார்க்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *