Aparna Nair: தற்கொலை!

Advertisements

பிரபல மலையாள நடிகை அபர்னா நாயர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

திருவனந்தபுரம்: கேரள திரைத்துறையில் பிரபல நடிகையாக இருப்பவர் அபர்னா (வயது 33). இவர் கல்கி, முத்துகவ், அச்சையன்ஸ், மேகத்தீரதம் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், அட்டசக்தி, மைதிலி வேண்டும் வரம் போன்ற பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துப் பிரபலமானார்.

அபர்னாவுக்கு திருமணமாகி சஞ்சித் என்ற கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், திருவனந்தபுரத்தின் கரமனா பகுதியில் உள்ள தனது வீட்டில் நடிகை அபர்னா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வீட்டில் நடிகை அபர்னாவின் தாயார் மற்றும் சகோதரி இருந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் தூக்கிட்டுள்ளார். அபர்னா தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அவரின் தாயார் அதிர்ச்சியடைந்தார். பின்னர், அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், அபர்னாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். நடிகை அபர்னாவின் தற்கொலைக்கான காரணம்குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக அபர்னா தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *