Advertisements

டேய் ரசமலாய் நீ மும்பைக்கு வந்தால் உன் லுங்கியை கழட்டுவோம் உன் காலை வெட்டுவோம் என அண்ணாமலைக்கு மகாராஷ்டிரா மாநில தாக்கரே சிவசேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரே எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய போன இடத்தில் மிகப்பெரிய மோதல் வெடித்திருக்கிறது அந்த மாநிலத்தில் உள்ள பெரும்பாலான வேர் அண்ணாமலைக்கு எதிராக போர் கொடி பிடித்து வருகிறார்கள் .
அங்குள்ள பத்திரிகைகள் அனைத்தும் அண்ணாமலையை காரசாரமாக திட்டி எழுதி வருகின்றன. அதே சமயம் அண்ணாமலை நான் மகாராஷ்டிராவுக்கு வருவேன் உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து பாருங்கள் என்று அறைகூவல் விடுத்திருக்கிறார் . மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற 15ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது இதனை ஒட்டி அங்கு தமிழர்கள் வாழும் பகுதியில் பிரச்சாரம் செய்வதற்காக தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை அனுப்பப்பட்டார் .
அங்கு அவர் பேசும் பொழுது மும்பை நகரம் என்பது மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சொந்தமானது அல்ல இது சர்வதேச நகரம் எனவே இந்தியா முழுக்க எல்லோருக்குமே மும்பை சொந்தமானது. இதை மகாராஷ்டிரா மாநிலத்துக்காரர்கள் தங்களுக்கு சொந்தம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என பேசினார் .
அவரது இந்த பேச்சுக்கு மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு அலையை ஏற்படுத்தி இருக்கிறது . மும்பை நகரம் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு மட்டுமே சொந்தமானது. இதனை சர்வதேச நகரம் என்று கூறி எங்களிடமிருந்து அண்ணாமலை பிரிக்க பார்க்கிறார் என மகாராஷ்டிரா மாநிலத்தவர்கள் அண்ணாமலை மீது குற்றச்சாட்டுகிறார்கள்.
தமிழ்நாட்டில் இருந்து இங்கு வந்து பேசுவதற்கு நீ யார்? மும்பை இந்த மண்ணுக்கு சொந்தம் இல்லை என்றால் உனக்கும் இந்த மண்ணுக்கும் என்ன சொந்தம் இருக்கிறது என சிவசேனா கட்சி தலைவர்ராஜ் தாக்கரே பொது மேடையில் கடுமையாக தாக்கி பேசி வருகிறார். இது மட்டுமில்லாமல் அண்ணாமலை மீண்டும் மும்பை வந்தால் அவரது மீது கருப்பு மையை தெளிப்போம் லுங்கியை கழட்டுவோம் . ஒரு காலை வெட்டுவோம் என்றெல்லாம் தாக்கரே மேடையில் பேசியிருக்கிறார் .
மராத்தி ஏசி கரண் சமுதி என்ற அமைப்பு அண்ணாமலைக்கு எதிராக களம் இறங்கி இருக்கிறது. அந்த அமைப்பினர் அண்ணாமலை உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் . மும்பை என்பது மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சொந்தமானது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அண்ணாமலை போல இங்கு பலர் வந்து போயிருக்கிறார்கள் என கருத்து தெரிவித்திருக்கிறது .
இதனிடையே அண்ணாமலை மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத்துது குரல் எழுப்பி இருக்கிறார். அவர் மேலும் கூறும் பொழுது அண்ணாமலை எங்கிருந்தோ வந்து நமது கன்னத்தில் அறைகிறார். நமது தன்மானம் எங்கே போனது அண்ணாமலை மீது பாட்னா அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் . ஆனால் அவர் பின்னால் மறைந்து கொண்டிருக்கிறார்கள் என்று சாடி இருக்கிறார் .
இதனிடையே மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திரபட்டில் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை மொழி தெரியாமல் பேசிவிட்டார் . அவரது பேச்சை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் மகாராஷ்டிர தலைவர்கள் அண்ணாமலை பேச்சை பொறுத்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார் .
இதற்கிடையே, அண்ணாமலை இது பற்றி கூறும் பொழுது நான் மீண்டும் மும்பைக்கு வருவேன் முடிந்தால் என் கால்களை வெட்டிப் பாருங்கள் என்று அறைகூவல் விடுத்திருக்கிறார் . தற்பொழுது இந்த விவகாரம் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் பூதாகரமாக வெடித்திருக்கிறது. அங்குள்ள தாக்கரே சிவசேனா கட்சி மகாராஷ்டிரா நவ நிர்ம சேனா மேலும் சில அமைச்சர்கள் என பலரும் அண்ணாமலைக்கு எதிராக போர் கொடி பிடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா மாநில முழுவதும் ஆங்காங்கே உள்ள மராட்டியர்கள் அண்ணாமலைக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அண்ணாமலையை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள். இதனால் மராட்டிய மாநிலம் முழுவதும் தற்பொழுது தேர்தல் நடைபெறும் நிலையில் மிகப்பெரிய பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
Advertisements



