Romeo Movie Song: வெத்தல வெத்தல பாடல் வெளியானது!

‘ரோமியோ’ திரைப்படம் ரம்ஜான் அன்று வெளியாக உள்ளது.

சென்னை:இசையமைப்பாளராகத் தனது பணியைத் தொடங்கிய நடிகர் விஜய் ஆண்டனி சில ஆண்டுகளிலேயே நடிப்பு பக்கம் கவனத்தை திருப்பினார். 2012-ல் ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அவருக்கு முதன்முதலில் இசையமைப்பாளராக வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சசியின் `பிச்சைக்காரன்’ படம் புதிய அவதாரத்தைக் கொடுத்தது. சலீம்’, ‘இந்தியா பாகிஸ்தான்’, ‘சைத்தான்’, ‘எமன்’, ‘அண்ணாதுரை’, ‘காளி’, ‘திமிரு பிடிச்சவன்’, `கொலைகாரன்’, இதோ இப்போது `கோடியில் ஒருவன்’ எனத் தற்போது இசையமைப்பதை குறைத்துக்கொண்டு நடிப்பதில் முழுமையாகக் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்தநிலையில் இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் ‘ரோமியோ’. இந்தப் படத்தில் மிருணாளினி ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா, ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘ரோமியோ’ திரைப்படம் ரம்ஜான் அன்று வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகிக் கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாடலைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ‘வெத்தல’ என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்தப் பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *