Annamalai :இந்தச் சின்னப் பையன் என்ன செய்வான் என்பதை இனி பார்க்கப் போகிறீர்கள்!

Advertisements

இந்தச் சின்னப் பையன் என்ன செய்வான் என்பதை இனி பார்க்கப் போகிறீர்கள் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைதெரிவித்துள்ளார்.

சென்னை:கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தன்னை பற்றி அவதூறு பேசியதாகத் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:-

* நான் அரசியலுக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் யார் மீதும் மான நஷ்ட வழக்கு தொடர்ந்ததில்லை.

* ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு எல்லையை மீறிச் சென்றுவிட்டது.

* ஆர்.எஸ்.பாரதி மீது சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நீதிபதியிடம் வலியுறுத்தியுள்ளேன்.

* ஆர்.எஸ்.பாரதியிடமிருந்து ரூ.1 கோடி பெற்று கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவேன்.

* இந்தச் சின்னப் பையன் என்ன செய்வான் என்பதை இனி பார்க்கப் போகிறீர்கள்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *