Advertisements
தழிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு பா.ஜனதா தேசிய தலைவரான ஜே.பி. நட்டாவை அவர் நேரில் சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் பற்றி இருவரும் கலந்தாலோசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் வருகிற 28-ந் தேதி அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து நடைபயணத்தை தொடங்குகிறார். இது தொடர்பாகவும் இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.