
விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்குத்தான்…
விருந்து கூட நீண்ட நாள் சாப்பிடலாம்…மருந்து…?? சாப்பிடமுடியுமா ? சாப்பிடலாமா ?..
நோய் தீர்க்கத்தான் மருந்து… மருந்தே நோயாகி உயிர்ப் பறிக்கும் நிலை தான் தற்போது உள்ளது. எப்படி? பார்க்கலாம் வாங்க…
சமீபத்தில் இந்தியாவின் மிகப் பெரிய மருந்துத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் மீது உலக சுகாதார அமைப்புக் குறை கூறியுள்ளது.மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை இந்தியர்கள் உட்கொள்வதால் பல பக்க விளைவுகளால் பாதிக்கப்படுகின்றனர்.
52 சதவிகித இந்திய மக்கள் இது போன்ற பக்க விளைவுகளால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்திய ஊடகம் ஒன்று இதுகுறித்து 341 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 22000 மக்களைக் கணக்கெடுத்தபோது 18 சதவிகித குடும்பங்களில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்குப் பக்கவிளைவுகள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றது.
அதுமட்டுமல்லாது, நோயினால் பாதிக்கபட்டோர்களை ஆய்வு செய்தபோது நிறைய பேர் ஒரு சில குறிப்பிட்ட மருந்துகளை உட்கொண்டதால் 85 சதவிகிதம் பேர் பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

மருந்துத் தயாரிப்பாளர்கள் அவற்றை டப்பாக்களில் அடைக்கும்போது செய்யும் சில தவறுகளும் இதற்குக் காரணமாகிறது.
மருந்து கட்டுப்பட்டுத் துறையானது இந்தியாவின் பிரபல கம்பெனி `அபாட்’ தயாரிக்கும் டைஜீன் ஜெல், மற்றும் டைஜீன் மாத்திரை பொது வினியோகத்திற்கு தடை விதித்து மக்கள் பயன்பாட்டிற்கும் தடை விதித்து அறிவுறுத்தியது.
அதாவது டைஜின் ஜெல், வாயுக்கோளாறு, அஜீரணம் சம்பந்தமான பிரச்சனைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இளம் சிவப்பு நிறத்தில் இனிப்புத் தன்மையுடன் கூடிய திரவ மருந்து இது நாள்வரை உபயோகத்தில், கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கும் மேலாக மக்கள் பயன்பாட்டிலிருந்து வருகிறது. அதே சமயம் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வெண்மை நிற டைஜின் ஜெல், கசப்பு சுவையுடன் சிறிது நெடியுடனும் இருப்பதால், மருந்து கட்டுப்பாட்டு வாரியம் விற்பனைக்கு ஆட்சேபம் தெரிவித்தது.
இந்த மருந்துகள் கோவாவில் உள்ள அபாட் நிறுவனத்தின் மற்றொரு பிரிவில் தயாராகிறது. இதுகுறித்து, டாக்டர் அனுக்கல் பிரகாஷ் கூறும்போது மருத்துவர் பரிந்துரையின் பேரில் தான், மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
அதை விடுத்து மக்கள் தாமாகவே ஏதோ ஒரு மருந்தைக் கடைகளில் வாங்கி பயன்படுத்தக் கூடாது. அது ஆபத்தில் முடியும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் நாம் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். இதுவரை அபாட் நிறுவன மருந்துகளால் யாரும் பாதிக்கபட்டதாகப் பொது மக்களோ, பயனாளிகளோ புகாரோ அல்லது பாதிப்பும் அடையவில்லை குறையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையில், கடந்த 12 மாதங்களாக டைஜீன் மாத்திரைகளால் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக மருந்து கட்டுப்பாட்டுத் துறை கூறி , 51 வகையான மருந்துகளுக்குத் தரமற்றது என அறிவித்துத் தடை விதித்து இருந்தது. இதில் குறிப்பாக ரோசு வர்ச்படின், சன், சிப்லா தயாரிப்புகள் இதில் அடங்கும்.
உலக சுகாதார அமைப்பானது இந்தியாவில் தயாரகும் ஏழு இருமல் மருந்துகளுக்குத் தடை விதித்து, குறிப்பிட்ட மருந்துகளால் பல இறப்புகள் நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
குறிப்பாக டைஎத்திலீன், எத்திலின், கிளைகால் போன்றவைகளால் பல இறப்புகள் நடந்துள்ளது, எனவும் 14 எப்.டி.சி மருந்துகளால் நரம்பு சம்பந்தப்ப்ட்ட நோய்கள் விளைந்ததாக அறிவித்தது.

ஓ.டி.சி. என்ப்படும் ஓவர்- தி-கவுண்ட்டர் முறையில் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு இல்லாமலே நேரிடையாக இன்ன பிரச்சினை என்று கேட்டு வாங்கிக் கொள்ளலாம். தலை வலி, முதுகு வலி, சொரி, நமைச்சல், அரிப்பு, பல் வலி, அலர்ஜி போன்ற பிரச்சினைகளுக்காக எடுத்துக் கொள்ளப்படும் மாத்திரைகள் உடனடி நிவாரணம் மட்டுமே தரும்.
சிறிது நாட்களுக்குப் பின்பு மீண்டும் இப்பிர்ச்சினையானது விஸ்வரூபம் எடுப்பதோடு, உடலில் உள்ள செல்களில் தங்கி அதற்கு உடலில் இடம் கொடுப்பதோடு, நாள்பட நாள் படக் கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் போன்றவற்றை நாளடைவில் செயலிழக்கச் செய்யும் அபாயம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.
சைட்டொக்ராமியா பி450 அனைத்து வித உயிர்களிலும், தாவரங்கள், பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றில் காணப்படும், ஒரு ஊக்கி அதாவது என்சைம். உடலின் அனைத்து செயல்களையும் இயக்கும் முக்கிய நிர்வாகி போன்றது. இது ஒரு சங்கிலி போன்று உடலின் அனைத்து உறுப்புகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துச் செயல்படுத்தி மேற்பார்வை செய்கிறது.
தலைமை உறுப்பாக அமிலம்மாக இருக்கும் சைடொக்ராம் பி450 கூடத் தொடர் மாத்திரைகளால் சிறிது சிறிதாகப் பாதிக்கப்படும். இதனால் உடலின் பாகங்கள் செயலிழந்து உயிர் போகும் நிலை ஏற்படும் என்பதே நிதர்சனமான உண்மை.
உடல் காப்போம்; உயிர் காப்போம்…
மருந்தைத் தவிர்ப்போம்… மண்ணில் வாழ்வோம்…


