இனி இதயத்துடிப்பும் கண்காணிக்கப்படும்! கூகுள் நிறுவனத்தின் அடுத்த பாய்ச்சல்!
கதை:
தொழில்நுட்ப வளர்ச்சியில் நாடு வெவ்வேறு படிநிலைகளை கடந்து நகர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தொழில்நுட்பம் இன்னொன்றை விட சிறப்பாக செயல்படக் கூடிய அளவில் கண்டுபிடிப்புகள் அரங்கேறி வருகிறது. தொடர்ச்சியாக பல சிறு நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை மக்களின் அன்றாட பணிகளையும், அவர்களுக்கு இன்னும் இன்னும் வாழ்வியலை எளிதாக்க முயற்சிகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் கூகுள் ஒரு புதிய முன்னெடுப்பு எடுத்து உள்ளது. அது என்னவென்றால் இயர் பட்ஸ் அல்லது ஹெட்போன் மூலம் இதய துடிப்பை கண்காணித்து சிக்னல் கொடுப்பதே. இந்த ஆராய்ச்சியை பல மாதங்களாக கூகுள் ஓசையின்றி நடத்தி வருகிறது.
Audio plethysmography – APG என்கிற இந்த குறிப்பிட்ட தொழில்நுட்பத்தின் திறனை பயன்படுத்தி active noise cancelling இயர் பட்ஸ் அல்லது ஹெட்போன்களில் இதய துடிப்பை மானிட்டர் செய்யும் வகையில் அந்த ஆப்ஷன் ஐ உள்ளீடு செய்ய கூகுள் பரிசோதனை செய்து வருகிறது. ஹாட் போன்களில் இருக்கும் அல்ட்ரா சவுண்ட் சிக்னல் மூலம் இதை சாத்தியப்படுத்த முடியும் என கூகுள் கணித்து உள்ளது. இந்த சிக்னலை பெற்று எதிரொலிகளை தூண்டும். இது பின்னர் onboard feedback microphone கள் மூலம் பெறப்படும்.
இப்படி பொறுத்தி ஆய்வு நடத்தியதில் மனித உடலில் அசைவு இருந்தால் ஒரு வித result கொடுப்பதாகவும், அசைவற்று அப்படியே இருக்கும் பொழுது வேறு ஒரு result கொடுப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இதில், சுமார் 150 க்கும் மேற்பட்ட நபர்களை வைத்து சோதனை செய்யப்பட்டு இரண்டு விதமான ரிசல்ட்ஸ் [results] கொடுத்து உள்ளதால் இன்னும் இந்த முறையை அப்டேட் செய்ய கூகுள் அடுத்த கட்ட நகர்வை மேற்கொண்டு வருகிறது.