சென்னைக்குக் கொண்டுவரப்பட்ட 300 அரசுப் பேருந்துகள் – அன்புமணி விமர்சனம்!

இந்தியா கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டை சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில்  தேவையின்றி பேருந்துகளை இயக்கி எரிபொருளை வீணாக்குவது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் 52-ஆம் பிறந்தநாளையொட்டி, கடந்த 22-ஆம் தேதி புதிய பேருந்துகள் இயக்கத் தொடக்கவிழாவுக்காக  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300 அரசுப் பேருந்துகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது அது எந்தவித பயன்பாடும் இல்லாமல்  மூன்றாவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

இந்தியா கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டை சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில்  தேவையின்றி பேருந்துகளை இயக்கி எரிபொருளை வீணாக்குவது கண்டிக்கத்தக்கது என்று கூறினார். இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட  ஓட்டுனர்களும், நடத்துனர்களும் தங்குவதற்கு இடமும், உணவும் இல்லாமல் தவித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

 

புதிய பேருந்துகளை தேவையில்லாமல் சென்னைக்கு அழைத்து வர அறிவுறுத்திய அதிகாரிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்  என்று தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *