2023 Cricket World Cup: மாரடைப்பால் உயிரிழந்தார் ஒரு அப்பாவி..என்ன நடந்தது!

Advertisements

போனால் போகட்டும் போடா.. என்று போவதை விட்டுவிட்டு என்னமோ குடி மூழ்கிப்போனது போல விளையாட்டை சீரியசாக எடுத்துக் கொண்டு வேதனை அடைந்து மாரடைப்பால் உயிரிழந்தார் ஒரு அப்பாவி..என்ன நடந்தது..

இதயமே இதயமே தோல்வி  என்னைக் கொல்லுதே என்று தோல்வியைக் கண்டு ஒருவருக்கு இதயம் நின்ற சோகம் அரங்கேறிய சம்பவம் ஆந்திர மாநிலம் துர்க்க சமுத்திரம் பகுதியில் நடந்துள்ளது. இப் பகுதியைச் சேர்ந்த  சாப்ட்வேர் என்ஜினீயரான ஜோதி குமார் தன்னுடைய வீட்டில் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியை தொலைக்காட்சியில் ஆவலாக  பார்த்து கொண்டிருந்தார். உலகமே உற்று நோக்க இந்தியாவுக்குத் தான் கோப்பை என கனவில் மிதந்தது அவர் மட்டுமல்ல. ஒட்டு மொத்த இந்தியாவும் தான்.

நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்பது போல டாஸ் வென்ற ஆஸ்திரேலியா இந்தியாவை பேட் செய்ய அழைக்க, இந்திய ரசிகர்கள் நெஞ்சை நிமிர்த்தி கைதட்டவும் விசில் அடிக்கவும் தயாராகினர். ஆனால் ஆஸ்திரேலியா பந்துவீச்சில் காற்றில் விழும் கனிகள் போல ஒவ்வொரு விக்கெட்டாக  விழ கருத்தது முகம் அனைவருக்கும். 240 ரன்கூட போராடி எடுத்தது இந்தியா.

சரி ஆஸ்திரேலியாவை  பேட்டிங்கில் வாரி சுருட்டலாம் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இடி விழுந்தது. மிக சுலபமாக 241 ரன்கள்  சாவகாசமாக அடித்து வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.  தோல்வியைத்  தாங்கிக் கொள்ள முடியாமல் ரசிகர்கள் கதறி அழுதனர். வீரர்களும் கூட அழுதனர்.  நம் தீவிர ரசிகர் ஜோதிகுமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இப்போது நிற்கதியாய் தவிக்கிறது குடும்பம்..

மக்களே விளையாட்டை விளையாட்டாக பாருங்கள். வெற்றி தோல்வி வாழ்வில் சகஜம். எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். இன்று தோற்றால் என்ன? நாளை நமதே அப்போது ஜெயிக்கலாம். முகமது கஜினி 18 முறை படையெடுத்தார். ராபர்ட் கிளைவ் 5 முறை தோல்வி கண்டு ஆறாவது முறை வென்று ஆட்சியை மீட்டார். எதற்கும் ஒரு வரம்பு உண்டு. அளவுக்கு அதிக எதிர்பார்ப்பு ஆபத்து..

என்னவேணா நடக்கட்டும்  நான் சந்தோசமா இருப்பேன் என்று இருங்கள் நண்பர்களே.. உயிர் போனால் திரும்பி வராது. திடமான மந்து வேண்டும்..குடும்பம் முக்கியம்.. விளையாட்டு அப்புறம்..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *