தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தடங்கி வைத்தார்.
திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக மதுரை வந்த முதலமைச்சர் விஜய்க்கு, விமான நிலையம் முதல் மருத்துவமனை வரை பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலையோரங்களில் பொதுமக்கள் அதிகளவில் திரண்டிருந்த நிலையில், வாகனத்தின் மீது நின்றபடி முதலமைச்சர் விஜய் அவர்களை பார்த்து கை அசைத்தார்.
ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு வந்த விஜய்க்கு அங்கு திரண்டிருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து விழா மேடைக்கு சென்ற முதலமைச்சர், 27 பயனாளிகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரத்தை வழங்கினார்.

மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்து, முஸ்லிம் , கிறிஸ்துவ மதங்களைச் சேர்ந்த தாய்மார்களுக்கும் தங்க மோதிரம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மீதமுள்ள 24 குழந்தைகளின் தாய்மார்களுக்கு மேடைக்கு கீழே சென்று முதலமைச்சர் விஜய் தங்க மோதிரங்களை வழங்கினார்.
மேலும், குழந்தைகளின் துணிகளிலும் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அருண்ராஜ், நிர்மல்குமார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




