தேசத்தின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்த மாவீரர் பகத்சிங்கின் தியாகத்தையும், தேசப்பற்று நிறைந்த வாழ்க்கையையும் போற்றி வணங்குவோம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், பாரதத் தாயின் விடுதலைக்காக இளம் வயதிலேயே தனது வாழ்வை அர்ப்பணித்து, அச்சமற்ற தேசப்பற்று மற்றும் தியாகத்தின் அடையாளமாகத் திகழ்ந்த மாவீரர் பகத்சிங்கின் பிறந்த தினம் இன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.
அடிமைத்தனத்திற்கு எதிராகத் துணிச்சலுடன் குரல் எழுப்பிய பகத்சிங், இளைஞர்களிடையே தேசப்பற்று, தன்னம்பிக்கை மற்றும் சமூக அக்கறையை விதைத்த மகத்தான புரட்சியாளராக வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படுகிறார் எனத் தெரிவித்துள்ளார். தேசத்தின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்த மாவீரர் பகத்சிங்கின் தியாகத்தையும், தேசப்பற்று நிறைந்த வாழ்க்கையையும் இந்நாளில் போற்றி வணங்குவோம் என்று கூறியுள்ளார். மேலும் அவரது வீரமும் அர்ப்பணிப்பும் வருங்கால தலைமுறையினருக்கு என்றும் உத்வேகமாகத் திகழட்டும் என்று தெரிவித்துள்ளார்.

