
ஜம்முவில் அனந்தநாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியி்ல் ராணுவம் மற்றும் போலீசார் ஈடுபட்டு வந்தனர். நேற்று (செப்.,13) இரு தரப்பினரிடையே பயங்கர மோதல் நிகழ்ந்தது…
ஸ்ரீநகர்: ஜம்முவின் அனந்தநாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான மோதலில் ராணுவ கர்னல், மேஜர், போலீஸ் டிஎஸ்.பி., என மூன்று பேர் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அப்பகுதியில் போராட்டம் வெடித்தது.
ஜம்முவில் அனந்தநாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியி்ல் ராணுவம் மற்றும் போலீசார் ஈடுபட்டு வந்தனர். நேற்று (செப்.,13) இரு தரப்பினரிடையே பயங்கர மோதல் நிகழ்ந்தது.

இச்சம்பவத்தில் ராணுவ கர்னல் மன்பிரீத்சிங், மேஜர் ஆசிஷ் தோனக் மற்றும் போலீஸ் டி.எஸ்.பி., ஹூமாயுன் பட் ஆகிய மூன்று பேர் வீரமரணம் அடைந்தனர். முன்னதாக ரஜோரி மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் ராணுவ ஜவான் ஒருவர் வீரமரணம் அடைந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, அனந்தநாக் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தானுக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட்டிலும், உலக கோப்பை கிரிக்கெட்டிலும் பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதக் கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.


