Sabarimala Temple: நடை17ம் தேதி திறப்பு!

சபரிமலை கோயில் நடை 17ம் தேதி திறப்பு…

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் புரட்டாசி மாத பூஜைகள் வரும் 18ம் தேதி தொடங்குகின்றன. இதை முன்னிட்டு 17ம் தேதி மாலை 5 மணிக்குக் கோயில் நடை திறக்கப்படும். தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து தீபாராதனை நடத்துவார்.

அன்றைய தினம் வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது. மறுநாள் (18ம் தேதி) அதிகாலை 5 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெறும். 18ம் தேதி முதல் 22ம் தேதிவரை இந்தப் பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் தினமும் பக்தர்கள் நெய்யபிஷேகம் நடத்தலாம். 22ம் தேதி இரவு 10 மணிக்குக் கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் புரட்டாசி மாத பூஜைகள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *