Amway India: MLM  திட்டங்கள் மூலம் 4000 கோடி மோசடி!

Advertisements

ஆம்வே நிறுவனமானது 4,050.21 கோடி ஆம்வே இந்தியா நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதில் 2,859 கோடி வெளிநாட்டு  முதலீட்டாளர்களின்  வங்கிக் கணக்குகளுக்கு சட்ட விரோதமாக அனுப்பப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை  திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியது.

ஆம்வே நிறுவனம் மற்றும்  இயக்குநர்கள் மீது  தெலுங்கானா போலீசார் பதிவு செய்து வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை  விசாரணையைத் தொடங்கியது. இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ரூபாய் 757 கோடி  மதிப்புள்ள சொத்துக்கள்  கடந்த ஏப்ரல் மாதம் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டது. இந்நிலையில் ஆம்வே இந்தியா நிறுவனத்துக்கு  எதிராக ஹைதராபாத் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை  நவம்பர் 20-ஆம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை  கூறியதாவது நுகர்வோர்  பொருள்கள் விற்பனை  என்ற பெயரி சட்டவிரோத  பணப்புழக்கத்தை  ஆம்வே நிறுவனம் ஊக்குவித்து வருகிறது. ஆனால் பொருள்கள்  விற்பனையில் கவனம் செலுத்தாமல்  சட்ட விரோதமாக உறுப்பினர்களை சேர்ப்பதிலேயே கவனம் செலுத்தியது. புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதன் மூலம் ஊக்கத்தொகை நிரந்தரமாக தொடரும் என்று போலியான வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றியுள்ளது. மேலும் பொருட்களை நேரடியாக விற்காமல் ஆம்வே உறுப்பினர்கள் `பல-நிலை சந்தைப்படுத்தல்’  மூலமாக  அதாவது மல்டி லெவல் மார்க்கெட்டிங் செய்துள்ளது. விநியோகஸ்தர்கள்  என்ற பெயரில் இடைத்தரகர்களை நியமித்துள்ளது.

மேலும் உறுப்பினர்களிடம் இருந்து பெரிய தொகையை வசூலித்துள்ளது. இப்படியான மோசடிகள் மூலமாக 4,2050.21 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. இதில் 2,859 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வங்கிக் கணக்கிற்கு சட்ட விரோதமாக அனுப்பியுள்ளதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவின் செய்தி தொடர்பாளர் அளித்துள்ள விளக்கத்தில் கடந்த 2011 -ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் இந்திய அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம்.   நாங்கள் 25 வருடங்களாக இயங்கி வருகிறோம் மேலும் இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு நாங்கள் எப்போதும் கட்டுப்படுகிறோம் . இந்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைப்பின் மீதான எங்களின் நம்பிக்கையை மீண்டும்  வலியுறுத்துகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *