Tiruchirappalli: அமலாக்கதுறை சோதனை!

திருச்சி மாநகரில் 4 நகை கடைகளில் 6 கார்களில்வந்த  20அமலாக்கதுறை அதிகாரிகள், 10 துணை இராணுவ வீரர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னையில் பல்வேறு நகை கடைகளில் சோதனை நடத்திய நிலையில் திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள 4 நகைக் கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நள்ளிரவு முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குறிப்பாகத் திருச்சி பெரிய கடை வீதிக்கு நேற்று நள்ளிரவு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 கடைகளில் தொடர்ந்து தீவிரமாகச் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் உள்ள பிரபல நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் திருச்சி சின்னக் கடை வீதியில் உள்ள ஜாபார்ஷா தெருவில் செயல்பட்டு வரும் ரூபி, சூர்யா விக்னேஷ் உள்ளிட்ட  மூன்று கடைகள், பெரிய கடை வீதியில் உள்ள சக்ரா செயின்ஸ் உள்ளிட்ட கடைகளிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *