Amma Makkal Munnettra Kazagam: கேக் வெட்டி, இனிப்பு வழங்கி 7 ஆம் ஆண்டு துவக்க விழா உற்சாகம்!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஏழாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு வில்லியனூர் தலைமைக் கழக அலுவலகத்தில் கேக் வெட்டி இனிப்பு வழங்கி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஏழாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு வில்லியனூர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை கழக அலுவலகத்தில்கேக் வெட்டி, இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யூசி ஆறுமுகம், மேற்கு மாநில கழக செயலாளர் எஸ்.டி. சேகர், கிழக்கு மாநில கழக செயலாளர் முருகன் ஆகியோர் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மூத்த குடி ரகுபதி, மகளிர் அணி செயலாளர் காமாட்சி, எம்ஜிஆர் மன்ற செயலாளர் நந்தகோபால், சீதாராமன், ஜெயபால் என்கிற செங்கேணி, ஹரி கிருஷ்ணன், இராமச்சந்திரன், செந்தில் என்கிற குமரவேல், ஜான்சன், சிவக்குமார், கண்ணதாசன், சதீஷ்கண்ணா, பூங்குழலி, முத்து, கண்ணன் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளரை ஆதரித்து வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் கூட்டத்தில் பேசப்பட்டது. மேலும் கழக வளர்ச்சிகுறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *