இரட்டை இலை சின்னம் – டெல்லி உயர்நீதிமன்றம்!

Advertisements

புதுடில்லி :

அதிமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சார்ந்த புகழேந்தி டில்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தார் அந்த வழக்கு இன்று (டிச.17) காலை நீதிபதி மனோஜ் ஜெயின் முன்பு விசாரணைக்கு வருகிறது 2024 மார்ச் மாதம் அண்ணா திமுக கட்சிக்குச் சின்னம் ஒதுக்குவதற்கு முன்னதாகப் புகழேந்தி டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

தேர்தல் ஆணையத்தில் கொடுத்த பல மனுக்கள் நிலுவையில் உள்ள நிலையில் அதை விசாரிக்காமல் முடிவெடுக்கக் கூடாது, விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

முழுவதுமாகக் கேட்டறிந்த நீதிபதி புதிதாக ஒரு மனுவைப் பெற்று அதை உடனடியாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார். புதிய மனுவும் புகழேந்தியால் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அதற்குப் பின்னர் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் மனுவின் மீது எடுக்கவில்லை. பின்னர் மூன்று முறை இதை நினைவு கூர்ந்து கடிதம் அனுப்பியும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்கவில்லை.

விசாரணையும் செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து டில்லியில் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தேர்தல் ஆணையர்கள் ஜானேஷ் குமார், சுப்பீர் சிங் சாந்து ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு புகழேந்தியால் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *