அமெரிக்காவில் ஏற்பட்ட விமான விபத்தில் 7 பேர் உயிரிழப்பு.!

Advertisements

அமெரிக்காவில் பனிப்புயலுக்கு இடையே ஏற்பட்ட கோர விமான விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் தொடர்ந்து அதிக அளவில்  பனிப் பொழிந்து வருவதால் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடகிழக்கில் உள்ள பேங்கர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தனியார் ஜெட் விமானம் புறப்பட்டது.

அப்போது, ஓடுபாதையிலிருந்து கிளம்பிய விமானம் அடுத்த 45 வினாடிகளில், கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்து விழுந்து தீப்பற்றியது.

இந்தக், கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஒருவர் மட்டும் பலத்தக் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *