திடீரென சரிந்தது தங்கம்.. மறக்காமல் இன்னைக்கே வாங்கிக்கோங்க.!

அமெரிக்க அதிபருக்கு டிரம்புக்கு தங்கமான மனசுய்யா, இழவெடுத்த போர முடிச்சாரோ இல்லையோ. பெண்கள் வயிற்றில் பால வாத்திருக்கிறார். காரணம் அமெரிக்காவில், டிரம்பின் அரசியல் செல்வாக்கு  சரிந்தாலும் கவலையில்லை. ஆனால் பெண்கள் தன் செல்வமாய் கருத்தும் தங்கத்தின் விலையை சரித்து, அவர்கள் மனதில் தங்க சரிக்வுக்கு காரணமான சரித்திர நாயகன் பெற்ற பெயரை பெற்றெடுத்த பெரும் டிரம்பையே சாரும்.  அப்படி பெண்கள் குளிரும்படி எந்தளவுக்கு தங்கம் சரிந்தது  என்பதன் பின்னணி குறித்து நம் ஜெம் தொலைக்காட்சி மூலம் பார்க்கலாம்.

உலக நாடுகளுக்கு இடையே போர் பதற்றம், வர்த்தகப் போட்டி, பொருளாதார நெருக்கடி என சர்வதேச அரசியல் ஒருபக்கம் அனல் பறக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது அதிரடி முடிவுகளால் உலக நாடுகளையே அவ்வப்போது திரும்பிப் பார்க்க வைக்கிறார்.

ஆனால், இத்தனை நாட்களாக இந்தியப் பெண்களின் பட்ஜெட்டையே ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிரோட்டமா என்று  கதிகலங்க வைத்த தங்கம் விலைதான் தற்போது அதிரடியாக சரியத் தொடங்கியுள்ளது!

கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏறும்போதெல்லாம் நகைக்கடைகளை பெண்கள் அண்ணார்ந்து கண்ணா லட்டு திங்க ஆசையா என்று கனவு கண்டு வாயைப் பிளந்து வேடிக்கை மட்டுமே பார்த்த பெண்களுக்கு, தற்போது சற்றும் மூச்சு விடும் அளவுக்கு நிம்மதி கிடைத்துள்ளது.

கடந்த 9ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,06,040 வரை உயர்ந்து பேர்அதிர்ச்சி கொடுத்தது. ஆனால், அதன்பிறகு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.

அந்த வகையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.99,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.12,470 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சுமார் 319 நாட்களுக்குப் பிறகு ஒரு சவரன் தங்கம் மீண்டும் ஒரு லட்சம் ரூபாய்க்குக் கீழே வந்துள்ளது.

இதனால், இதுவரை தங்கத்தின் விலையைக் கேட்டாலே நகைக்கடைக்குச் செல்லும் திட்டத்தையே ஒத்திவைத்த பெண்கள், இப்போது மீண்டும் நகைக்கடை பக்கம் சரோஜா குண்டுமணி, குட்டூசி போன்று தங்கம் வாங்கலாமாடி என்று கடையை சற்று எட்டிப்பார்க்கிறார்களாம்.

ஒருபக்கம் டிரம்ப் தனது வர்த்தகக் கொள்கைகளால் உலகச் சந்தையைத் திரும்பிப் பார்க்க வைக்கிறார். மறுபக்கம் தங்கம் விலை தனது சரிவால் நகைப்பிரியர்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இதுவரை தங்கம் விலை ஏறும்போது, கணவர்களின் பாக்கெட்டில் இருந்த பணமும், சேமிப்பும் காணாமல் போனது. இப்போது விலை குறையத் தொடங்கியதும், மனைவிகளின் நகைப்பட்டியலில் இருந்த ஆசைகள் மீண்டும் உயிர்பெறத் தொடங்கியுள்ளன!

ஆனால், இந்தச் சந்தோஷம் நீடிக்குமா? அல்லது மீண்டும் விலை ஏறி அதிர்ச்சி கொடுக்குமா? என்பதுதான் நகைப்பிரியர்களின் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி!

இதற்கிடையே, வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.190-க்கும், ஒரு கிலோ ரூ.1.90 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மொத்தத்தில், உலக நாடுகளின் பொருளாதாரக் கணக்குகளுக்கு நடுவே, தங்கம் விலையின் இந்தச் சரிவு இல்லத்தரசிகளுக்கு மட்டும் ஒரு சிறிய தீபாவளிக் கொண்டாட்டமாக அமைந்துள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *