அட்டகாசமான முட்டை சுக்கா ரெசிபி…!

Advertisements

அசைவ உணவுகள் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது முட்டைதான். பொதுவாக இறைச்சியை ஞாயிறு மட்டுமே சாப்பிடுவோம், ஆனால் முட்டையைத் தினமும் கூடச் சாப்பிடுவோம்.

இறைச்சி இல்லாத நாட்களில் அசைவ உணவின் இடத்தை நிரப்புவதும் முட்டைதான். முட்டை சுவையான உணவு என்பதையும் தாண்டி ஆரோக்கியமான உணவும் கூட. அதனால்தான் தினமும் 2 முட்டை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

முட்டையைப் பொதுவாக வேகவைத்தோ, பொரியல் செய்தோ மிகவும் பரவலாக ஆம்லெட் போட்டோ சாப்பிடுவோம், மிஞ்சிப்போனால் குழம்பு வைத்துச் சாப்பிடுவோம். ஆனால் நம்மில் பலரும் அறியாதது முட்டையைச் சிக்கன் போலவே பல வழிகளில் சமைக்கலாம்.

அப்படி முட்டையைச் சமைக்க ஒரு சூப்பரான வழிதான் முட்டை சுக்கா. காரசாரமான இந்த முட்டை சுக்கா பிரியாணி முதல் அனைத்து வகையான சாதத்திற்கும் சூப்பரான சைடிஷாக இருக்கும். இந்தப் பதிவில் சூப்பரான முட்டை சுக்காவை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:

  • 6 முட்டை
  • 4 ஸ்பூன் எண்ணெய்
  • 1 துண்டு இலவங்கப்பட்டை
  • கால் ஸ்பூன் சோம்பு
  • 3 நறுக்கிய பச்சை மிளகாய் நறுக்கியது
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • 20 நறுக்கிய சின்ன வெங்காயம்
  • 1 ஸ்பூன் கரம் மசாலா
  • 1 ஸ்பூன் கரம் மசாலா
  • 1ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • கொத்தமல்லி சிறிதளவு
  • அரைக்க: 

  • 2 ஸ்பூன்மிளகு
  • 1 ஸ்பூன் சீரகம்

செய்முறை:

  • முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி முட்டைகளை அதில் போட்டுச் சிறிது கல் உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.

 

  • ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு மற்றும் சீரகத்தை சேர்த்து பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

 

  • முட்டை நன்றாக வெந்ததும் முட்டையைத் தனியாக எடுத்து. முட்டை ஓட்டை உடைத்து மஞ்சள் கரு உடையாமல் தனியாக உரித்து வைத்துக் கொள்ள கொள்ள வேண்டும். பின்பு முட்டையின் வெள்ளை கருவைச் சிறு சிறிதாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  •  பின்பு வேறொரு கடாயை அடுப்பில் வைத்துத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடேறியதும் பட்டை, சோம்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  •  

    அதன் பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும் வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும்.

  •  

    வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் கரம் மசாலா, மிளகாய் தூள், கறி மசாலா சேர்த்து வதக்க வேண்டும்.

  •  

    மசாலா பச்சை வாசனை போனதும் அரைத்து வைத்த மிளகு, சீரகப் பொடியையும் அதனுடன் சேர்த்து போட்டு நன்கு வதக்க வேண்டும்.

  •  

    பின்பு மசாலா நன்றாக வதங்கியதும் அதனுடன் நாம் வெட்டி வைத்திருக்கும் முட்டையின் வெள்ளை கருவைச் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக வதக்கவும்.

  •  

    கடைசியாக மஞ்சள் கருவைச் சேர்த்து மஞ்சள் கரு உடையாமல் கிளறி விடவும். 2 நிமிடம் அப்படியே மூடி வைக்கவும்.

  •  

    பின்பு சிறிது கொத்தமல்லியை தூவி கடாயை இறக்கி விடவும். காரசாரமான முட்டை சுக்கா ரெடி!

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *