Delhi Liquor Policy Case:கெஜ்ரிவாலுக்கு எதிராகச் சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

Advertisements

புதுடெல்லி:டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாகச் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்நிலையில் டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாகச் சி.பி.ஐ. இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ரோஸ் அவென்யூவில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேட்டில் முக்கிய சதிகாரரே கெஜ்ரிவால் தானெனச் சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது.

இதனிடையே, கெஜ்ரிவாலின் ஜாமீன் மீதான விசாரணை இன்று டெல்லி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 8-ந் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 12-ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால ஜாமின் அளித்தது. சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கினாலும், இன்னொரு வழக்கில் அவரைச் சி.பி.ஐ., கைது செய்தது. இதனால் கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளியே வர முடியவில்லை.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *